;
Athirady Tamil News

’ஊடகவியலாளர்களின் உரிமையை பறிக்க மாட்டோம்’ !!

0

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்தால் ஊடகவியலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படாதென விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தாம் எழுதும் விடயங்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கு ஊடகவியலாளர்கள் தயாராக இருந்தால், எந்த சட்டம் வந்தாலும் அஞ்சத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்துக்கு அமைய ஊடகவியலாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு செல்ல முடியும் எனவும் நாமல் மேலும் தெரிவித்தார்.

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை நேற்று (09) ஆரம்பித்து வைத்து தொடர்ந்து உரையாற்றிய அவர், தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்துக்கு எதிராக இருவரே உயர்நீதிமன்றம் சென்றிருந்தனர்.

இச்சட்டமூலம் பாராளுமன்றத்தின் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கான 14 நாட்களுக்குப் பின்னரே இந்த இரு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனூடாக இச்சட்டமூலம் மீது எவருக்கும் அதிகளவில் ஈடுபாடில்லை என்பதே தெளிவாகிறது எனவும் தெரிவித்தார்.

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்தின் ஊடாக நாட்டிலுள்ள அரச இயந்திரம், மக்களுக்கான சேவைகளை டிஜிட்டல் மயமாக்கவே எதிர்பார்க்கிறோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.