;
Athirady Tamil News

பிரான்ஸ் தூதருக்கு மனோ எம்.பி விடுத்த கோரிக்கை !!

0

ஐரோப்பிய ஒன்றிய அரசுகள், இலங்கையின் மலையக தமிழ் மக்களை கவனத்தில் கொள்ள பிரான்ஸ் வழி காட்ட வேண்டும் என்ற எனது கோரிக்கையை பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவர்டு சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்த .தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இதுபற்றி ஆவனவற்றை தாம் செய்வதாகவும் உறுதியளித்தார் என்று தெரிவித்தார்.

எதிர்வரும் தினங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழுவை சந்திக்க விரும்புவதாகவும் பிரான்ஸ் தூதுவர் தெரிவித்ததாகவும் மலையக மக்களின் அரசியல் ஆவணத்தை அனைத்து சர்வதேச சமூக பிரதிநிதிகளுக்கும் கையளித்து, கலந்துரையாட தீர்மானித்துள்ளோம் என்றும் மனோ. எம்.பி தெரிவித்தார்.

சர்வதேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு, பெருந்தோட்ட பெண்களை மையப்படுத்திய ஒரு நிகழ்வை கொழும்பில் பிரான்ஸ் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

இங்கே வளவாளர்கள் அழைக்கப்பட்டு, தேயிலை பெருந்தோட்டங்களில் பணி செய்யும் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கலந்து உரையாடியமைக்காக பிரான்ஸ் தூதரகத்துக்கு நன்றி கூறுகின்றேன்.

முதற்கட்டமாக மலையக தமிழர்களின் அரசியல் சமூக அபிலாஷைகளை நாம் சர்வதேச மயப்படுத்த நாம் தீர்மானித்துள்ளோம். இந்திய வம்சாவளி மலையக தமிழர் அபிலாஷைகளை தேசிய, சர்வதேசிய அரங்குகளில் முறைப்படி முன்வைக்க நாம் திடசங்கட்பம் பூண்டுள்ளோம்.

அது படிப்படியாக நடக்கும். இதில் நான் பிரதான பாத்திரம் வகிக்கிறேன். எதிர்வரும் வாரங்களில் நாம் இது தொடர்பில் காத்திரமாக நடவடிக்கை எடுப்பதை நாடு பார்க்கும்.

இந்நாட்டில் வாழும் ஏனைய மக்களை பற்றி அறிந்துள்ள சர்வதேச சமூகம் இனி மலையக தமிழ் மக்கள் பற்றி அறிய வேண்டும். மலையக தமிழர் இல்லாமல் இலங்கை பற்றிய தகவல் முழுமை அடையாது. மலையக மக்கள் படும்பாட்டை இன்று நீங்கள் அறிய விரும்புவது நன்கு தெரிகிறது. இது ஒரு புது நகர்வு. இதை நன் அர்த்தமுள்ளதாக மாற்றுவேன்“ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.