எரிபொருள் விலையை அதிகரிக்க யோசனை !!
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், விலைவாசிக்கு ஏற்றவாறு எரிபொருள் விலை அதிகரிக்க வேண்டும் என, அரசாங்கத்துக்கு முன்மொழிந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க, நேற்று (10) தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
தற்போது, ஒரு லீற்றர் டீசலுக்கு 128 ரூபாய் மற்றும் ஒரு லீற்றர் பெற்றொலுக்கு 80 ரூபாய் நட்டமும் கூட்டுத்தாபனத்துக்கு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் விலையை திருத்தும் அதிகாரம் பெற்றொலியக் கூட்டுத்தாபனத்துக்கு மட்டும் இருந்தால், அது தவிர்க்க முடியாமல் விலையை உயர்த்தும் என்று குறிப்பிட்டார்.
தற்போதைய விலையில் இந்த செலவை அரசாங்கம் ஏற்கும் என்று தாம் நினைக்கவில்லை என்றும், இந்த விலைகளை பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.