முச்சக்கரவண்டி கட்டணமும் கோதுமை மாவின் விலையும் அதிகரிப்பு !!
கோதுமை மாவின் விலையை செரண்டிப் நிறுவனம் அதிகரித்துள்ளது. அதன்பிரகாரம், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை, அந்தநிறுவனம் 35 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
முதல் கிலோமீட்டருக்கு 80 ரூபாயும் இரண்டாவது கிலோமீட்டருக்கு 50 ரூபாயும் முச்சக்கரவண்டிக் கட்டணமாக அறவிடப்படுவது நியாயமானது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் யோசனை முன்வைத்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இது நியாயமான விலை அதிகரிப்பு என அதன் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.