ஸ்ரொபெரியின் குணநலன்கள் !!
அதிகமாகப் பழங்களை உட்கொள்வதினால் தேகாரோக்கியம் மேம்படும் என்பது பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். எனினும் ஒருசில பழங்களிலேயே அதிகளவிலான விட்டமின்கள், கனியுப்புக்கள் என்பன நிறைந்து காணப்படுகின்றன. இவற்றினை நாள்தோறும் உண்பதால் உடல் பலம் பெற்று நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
அந்தவகையில் ஸ்ரொபெரி பழம் தனியிடம் பிடிக்கின்றது. இப்பழத்தை தினசரி உண்பதால் அல்லது ஜூஸ் செய்து குடிப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது. மேலும் உடல் சோர்வு, அசதி என்பவற்றுக்கும் சிறந்த தீர்வை வழங்குகின்றது.
ஸ்ட்ரொபெரி பழத்தில் உள்ள விட்டமின் சி, ஏ, கே மற்றும் தையனின் என்பவற்றுடன் “பிலேவனாய்ட்” என்ற பொருளும் காணப்படுகின்றது. இது நோய் எதிர்ப்பு சக்திக்கு இணையாக செயற்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்ரொபெரியை தினசரி உண்பதினால் முகப்பரு தொல்லைகள், இரத்த அணுக்களைப் புதுப்பித்தல், உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமலும் காக்கின்றது. அத்துடன் உடலை பொலிவுடன் வைத்திருக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மிக முக்கியமாக புற்று நோய் வராமல் தடுப்பதிலும் பங்களிப்பு செய்கின்றது.