அரசாங்கத்தை விட்டு விலகப் போவதில்லை!!
தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தில் இருந்து விலகப்போவதில்லை என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
நாடு நெருக்கடியான நிலையில் உள்ள நேரத்தில் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது ஏற்புடையதல்ல என்றும் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற அக்கட்சி கருதுவதாக அறியமுடிகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவிலுள்ள 14 பேரில், பெரும்பான்மையானவர்கள் கருத்தையே கொண்டுள்ளனர் என்று கட்சி வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனினும், ஓரிரு உறுப்பினர்கள் மட்டுமே அரசாங்கத்தில் இருந்து வெளியேற விரும்புவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அற்கமைய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.