வடக்கு ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்…!!
ஈராக்கின் வடக்கு நகரமான இர்பிலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை நோக்கி சுமார் ஆறு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஈராக்- அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணைகள் அண்டை நாடான ஈரானில் இருந்து ஏவப்பட்டது என்றும், ஏவுகணைகள் கட்டிடத்தை தாக்கியதாகவும் ஆனால் இதில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது 12 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளது. இதில், 6 ஏவுகணைகள் அமெரிக்க தூதரக கட்டிடம் மீது பாய்ந்துள்ளது. மீதமுள்ள ஆறு ஏவுகணைகள் எங்கு பாய்ந்தது என்று தெரியவில்லை. இதில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக என்றும் இதுவரை தகவல் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, டமாஸ்கஸ் பகுதி அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் புரட்சிப் படையைச் சேர்ந்த இருவரை சிரியா கொலை செய்த சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் பழிவாங்கப்படும் என்று உறுதியாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.