நேட்டோ உறுப்பு நாடுகளை ரஷிய படைகள் தாக்கலாம்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை…!!
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாடு மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது.
முக்கிய நகரங்களை குண்டுகளை வீசி தகர்த்து வருகிறது. நேட்டோ அமைப்பில் சேரும் முடிவை தாங்கள் கைவிட்டு விட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்து விட்ட போதிலும் ரஷியா தாக்குதலை நிறுத்தவில்லை.
இந்தநிலையில் போலந்து எல்லை அருகே உள்ள உக்ரைன் ராணுவ தளம் மீது ரஷியா விமான தாக்குதலை நடத்தியது.
இந்தநிலையில் போலந்து எல்லை அருகே ரஷியா தாக்குதல் நடத்தியதால் நேட்டோ அமைப்புக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நீங்கள் எங்கள் வான் எல்லையை மூடாவிட்டால் உங்கள் (நேட்டோ) குடிமக்களின் மீது தாக்குதல் நடத்தப்படும் நிலை ஏற்படும்.
போலந்து எல்லையையொட்டி வான் தாக்குதலை ரஷியா நடத்தி விட்டது. இதனால் நேட்டோவில் உள்ள உறுப்பு நாடுகள் மீது எந்த நேரத்திலும் ரஷியா தாக்குதலில் ஈடுபடலாம். இதனால் நேட்டோ இனியாவது கவனமுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.