நெடுந்தீவு போக்குவரத்தில் பொது மக்களுக்கு ஏதாவது ஆபத்து நிகழுமாக இருந்தால்…!!
குறிகட்டுவான் நெடுந்தீவு போக்குவரத்தில் பொது மக்களுக்கு ஏதாவது ஆபத்து நிகழுமாக இருந்தால் அதனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினரே பொறுப்பெடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் தெரிவித்துள்ளார்
இன்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வுக் குழுக் கூட்டம் இடம்பெற்றபோது குறிகட்டுவான் நெடுந்தீவு போக்குவரத்து தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது குறித்த போக்குவரத்து விடயம் தொடர்பில் நெடுந்தீவு பிரதேச செயலாளரினால் மீளாய்வுக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போது
தற்போது நெடுந்தீவு குறிகட்டுவான் இடையே தனியார் படகு சேவையில் ஈடுபடுவதன் காரணமாக பொதுமக்கள் அபாயத்துடன் பயணிக்க நேரிடுவதாகவும் கூறினார் நெடுந்தாரகை,குமுதினி, படகு பழுதடைந்துள்ளதன் காரணமாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் சாதாரண படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்
சாதாரண படகுகள் திருத்த வேலை உள்ள நிலையில் சேவையில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது இதனையடுத்து குறிகட்டுவான் நெடுந்தீவு கடல் பயணத்தில் பொது மக்களுக்கு ஏதாவது அபாயம் நிகழும் இடத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”