தைத்த ஆடைகளின் விலை 31 சதவீதத்தால் அதிகரிக்கும் !!
மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பால், நாட்டில் தைத்த ஆடைகளின் விலை, 30- 31 சதவீதத்தால் அதிகரிக்க நேர்ந்துள்ளதாக அகில இலங்கை சிறிய மற்றும் நடுத்தர தொழிற்றுரையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆடைகளுக்கான மூலப்பொருள்களை கொண்டு வருவதற்கு, 40 அடி நீளமான கொள்கலனுக்காக அறவிடப்பட்டு வந்த போக்குவரத்து கட்டணமான இரண்டு இலட்ச ரூபாய், தற்போது பத்து இலட்ச ரூபாயாக கப்பல் நிறுவனங்கள் அறவிடுவதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் தேசிய தைத்த ஆடைகள் உற்பத்தி துறை பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் பலர் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர் என்றும் அச்சங்கத்தின் தலைவர் நிருக்ஸகுமார தெரிவித்துள்ளதுடன், நாட்டுக்கு எவ்வித சுமையுமின்றி கிராமிய மக்கள் தம்மிடம் உள்ள தையல் இயந்திரத்தைப் பயன்படுத்தி, ஆடை உற்பத்தியை முன்னெடுத்து வரும் நிலையில், தற்போதைய நிலை பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.