மத்திய வங்கியின் அதிரடி அறிவிப்பு !!
வெளிநாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பணம் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான உத்தேச மேலதிக ஊக்குவிப்புத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நாணய மாற்று விகிதத்தில் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும் தீர்மானத்தின் விளைவாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய நாணய மாற்று விகிதமானது வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்களின் அந்நியச் செலாவணிக்கு அதிக வருமானத்தையும், ஏற்றுமதியாளர்களின் நிகர வருவாயில் அதிக ரூபாய் மதிப்பையும் வழங்குகிறது என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.