கோபம் வெறுப்பு மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடிக்கும் – ராகுல் காந்தி கிண்டல்…!!!
ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் நெட்வொர்க் அமைப்பு வெளியிட்டுள்ள, உலகில் மகிழ்ச்சி நிறைந்த நாடுகளின் நடப்பாண்டிற்கான பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு அமைப்பு, ஆயுட்காலம், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த பட்டியலில் 150 நாடுகள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, லக்சம்பர்க், ஸ்வீடன், நார்வே, இஸ்ரேல் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட முதல் 10 இடங்களில் உள்ளன.
அமெரிக்கா 16வது இடத்தையும், இங்கிலாந்து 17வது இடத்தையும், பிரான்ஸ் 20வது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த பட்டியலில் இந்தியா 139வது இடத்தில் இருந்து மூன்று இடங்கள் முன்னேறி 136வது இடத்தை பெற்றுள்ளது.
இந்த தரவரிசை பட்டியலில் இந்தியாவின் இடம் குறித்து தமது ட்விட்டர் பதிவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளிப்படையாக கிண்டல் செய்துள்ளார்.
பசி தர வரிசையில் இந்தியா 10 இடத்திலும், சுதந்திரம் தரவரிசையில் இந்தியா 119 இடத்திலும், மகிழ்ச்சியான மக்கள் தரவரிசையில் இந்தியாக 136வது இடத்திலும் உள்ளது என்றும் விரைவில் வெறுப்பு மற்றும் கோபம் தர வரிசையில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.