விலை உயர்வால் நுகர்வோர் கடும் அவதி!!
சந்தையில் பொருட்களின் விலை உயர்வால் நுகர்வோர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவினால் காய்கறிகள் உட்பட பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது.
வாடிக்கையார் ஒருவர் கூறும் போது,
“ஐயோ சேர்…பேசாதீர்கள். பாணின் விலையை பாருங்கள்..165 ரூபாய். பருப்பு வாங்க வந்தேன்… ஐயோ 400 ரூபாய்….எப்படி நாங்கள் சாப்பிடுவது…நான் கூலி வேலை செய்கிறேன்…இன்று பொருட்களை வாங்கிய பின்னர்… நாளை பணம் கேட்டு எனது மனைவி என்னை அடிப்பார்… 5,000 ரூபாயுடன் கடைக்கு வந்து ஒரு ரூபாய் பையில் கூட பொருட்களை வாங்க முடியாத நிலை இன்று உள்ளது.
இதேவேளை, நேற்று (19) முதல் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிக்க இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ள நிலையில் சந்தையில் இன்னும் பால் மாவிற்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், மில்கோவின் எந்தவொரு உற்பத்திப் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட மாட்டாது என மில்கோ தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சில பால் மா கடைகள் மூடப்பட்டுள்ளமையை காணக்கூடியதாக உள்ளது.
இதேவேளை, பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக நேற்றிரவு பல இடங்களில் தீபம் ஏந்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.