ரமேஸ்வரன் எம்.பிக்கு புதிய பதவி !!
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின. பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, ரமேஸ்வரன் எம்.பி தனது விசேட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், அந்தப் பதவியை இன்னும் பொறுப்பேற்கவில்லை என தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் நாட்களில் அந்தப் பதவியை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும் ஜனாதிபதி தலைமையில் நாளை நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டுக்கு செல்லமாட்டோம் என்றும் குறித்த மாநாட்டில் மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்படாது என்பதால் சர்வகட்சி மாநாட்டுக்கு செல்ல தீர்மானிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.