கழிவு நீர் சுத்திகரிப்பு சுகாதார திட்ட விழிப்புணர்வு!! (படங்கள்)
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஏற்பாட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு சுகாதார திட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று (21.03.2022) பி.ப 2.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கழிவு நீர் சுத்திகரிப்பு சுகாதார திட்டம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய ”சுகாதார பாரிய திட்டம்” என்னும் நூல் வெளியிடப்பட்டதுடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் இத்திட்டத்தினை 2020-2030 க்குள் எவ்வாறு மேற்கொள்வது, அதன் குறிக்கோள்கள் அடைவதற்கான சாத்தியப்பாடுகள், எவ் இடங்களில் மேற்கொள்வது, கழிவு நீர் சுத்திகரிப்பை சரியாக மேற்கொள்ளாமையால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள், அதற்கான தீர்வுகள், நிதித் தேவைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் , தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வடக்கு மாகாண பிரதி பொது முகாமையாளர் ஏ.எம்.ஏ.ரபீக்தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உதவி பொது முகாமையாளர் ஈ.ஈ.யேசுதாசன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) சு.முரளிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவிமாவட்டச் செயலாளர், பொறியியலாளர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள்,கௌரவ பிரதேச சபை தவிசாளர்கள், நகரசபை தவிசாளர்கள் உள்ளிட்ட துறைசார் பங்குதாரர்களும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”