அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழ்நாட்டு மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.!! (படங்கள், வீடியோ)
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழ்நாட்டு மீனவர்களும் நிபந்தனைகளுடன் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – காரைநகரை அண்டிய கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மற்றும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் கடற்படையினர் கடந்த மாதம் 24 ஆம் திகதி கைது செய்து யாழ்ப்பாணம் – மயிலட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்துச்சென்றனர்.
அதனையடுத்து மீனவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட போது குறித்த மீனவர்களை மார்ச் மாதம் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்மாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 10 ஆம் மீன்டும் வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது 22 மீனவர்களையும் மார்ச் மாதம் 23 ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் சிறையில் விளக்கமறியலில் வைக்மாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று சிறைகாவல் முடிந்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன் போது கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கை எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டமை,
நீரியல் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்டமை கைது செய்யும் வேளையிலும் வலைகளை தொடக்கறுத்து வைக்காமை, மற்றும்
தடைசெய்யப்பட்ட இழுவைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டமை ஆகிய 3 குற்றச் சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதவான் மூன்று குற்றச் சாட்டுக்களுக்கும் தலா ஆறு மாதம் சதாரண சிறைத் தண்டணை 10 வருடங்களுக்கு ஒத்தி வைத்து நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
13 மீனவர்கள் மீன்பிடி இழுவைப்படகு உரிமையாளரும் உள்ளமையினால் படகு பறிமுதல் செய்யப்பட்ட அதே வேளை மற்றைய படகுக்கான உரிமை கோரும் வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 24 திகதி தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”