பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான விழிப்புணர்வுக் கலந்துரையாடல்.!! (படங்கள்)
அனைவருக்கும் இனிமையான பயணம் – பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான விழிப்புணர்வுக் கலந்துரையாடல்.
அனைவருக்கும் இனிமையான பயணம் எனும் தொனிப்பொருளில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் தேசிய பெண்கள் குழு, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துடன் இணைந்து பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (23.03.2022) மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், முன்னாள் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளரும், தற்போதைய தேசிய பெண்கள் குழு உறுப்பினருமான திருமதி. இமெல்டா சுகுமார் அவர்கள் கலந்துகொண்டதோடு, மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன், சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. கோசலை மதன் (சட்டபீடம், யாழ்.பல்கலைக்கழகம்) மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பேரூந்து செலுத்துநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
மேலும், இக் கலந்துரையாடலில் வளவாளராக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. கோசலை மதன் அவர்கள் கலந்துகொண்டு பொதுப்போக்குவரத்தில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பாலியல் மற்றும் பாலியல்சாராத வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துக்களை வழங்கினார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”