‘காணிகளை அபகரிப்பதில் பசில் கைத்தேர்ந்தவர்’ !!
காணிகளை அபகரிப்பதில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ கைத்தேர்ந்தவர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற துசார இந்துனில் தெரிவித்தார்.
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழான 2251/48, 2262/50 மற்றும் 2266/5 இலக்க வர்த்தமானப் பத்திரிகையின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மீதான நேற்றைய (23) விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், பாரியளவில் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டு ஏற்படுகிறது. அதன் பின்னர் விலை அதிகரிக்கப்படுகிறது. தற்போது முத்துராஜவல மூடப்பட்டுள்ளது. இதன் பின்னர் இது நட்டத்தில் இயங்கும் நிறுவனமாகக் காண்பித்து இதனையும் விற்றுவிடுவார்கள் எனவும் தெரிவித்தார்.
இந்துசமுத்திரத்தின் முத்து என்றே இலங்கையைக் கூறினார்கள். இப்போது எங்கே அந்த முத்து? தென் ஆசியாவில் காணிகளை விற்பனை செய்யும் இடமாக இலங்கை மாறியிருக்கிறது. பலவந்த நாடுகள் இலங்கையை கொள்ளையடித்து வருகிறார்கள். நாட்டின் சொத்துகளை விற்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
இலங்கைக்கு சொந்தமான கடற் பரப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பெறுமதியான சொத்துக்களை தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து விற்று வருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
நாட்டின் நிதி அமைச்சர் காணி தொடர்பில் விசேட நிபுணர். காணிகளை பிடிப்பதில் அவருக்கு அதிக திறமை இருக்கிறது எனவும் தெரிவித்தார்.