தடையை நீக்கியது இலங்கை மத்திய வங்கி !!
இலங்கை மத்திய வங்கி, அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகள் மீதான தடையை நீக்கியுள்ளதுடன், இறக்குமதியாளர்களுக்கு அந்நிய செலாவணி வசதிகளை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த புதிய முடிவானது நாட்டில் உள்ள பொருட்களின் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டுவருவதில் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு விலை 274.99 ரூபாயாகவும் விற்பனை விலை 284.99 ரூபாயாகவும் காணப்படுவதாக மத்திய வங்கி தரவுகள் சுட்டிக்காட்டியிருந்தபோதிலும் 285 ரூபாய் முதல் 290 ரூபாய்க்கு டொலர்கள் விற்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க டொலரொன்றுக்கான இலங்கை ரூபாயை 230 ஆக பேணுவதற்கு தீர்மானத்துள்ளதாக மத்திய வங்கி அண்மையில் அறிவித்திருந்த நிலையிலேயே மேற்குறிப்பிட்ட விற்கும் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.