’நாட்டு மக்களை பலிவாங்குகிறது அரசாங்கம்’ !!
பாராளுமன்றத்தை பசில் ராஜபக்ஸ ஐந்து சதத்துக்குக்கூட கண்டுக்கொள்வதில்லை என தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், நாட்டு மக்களை வரிசைகளில் நிறுத்தி அரசாங்கம் பலிவாங்குவதாகவும் தெரிவித்தார்.
சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் சற்றுமுன்னர் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், பாராளுமன்றத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஐந்து சதத்துக்குக்கூட கணக்கெடுப்பதில்லை. இதுவொரு பாரதூரமான விடயம். பாராளுமன்றத்துக்கு பசில் பொறுப்புக்கூற வேண்டும். அதுபோல நாட்டு மக்களையும் வரிசைகளில் நிறுத்தி அவர்களை அரசாங்கம் பலிவாங்குகிறது. உலகில் எந்தவொரு நாட்டிலும் தற்போது வரிசைகள் இல்லை எனவும் தெரிவித்தார்.