சிபெற்கோவும் விலையை அதிகரிக்குமா?
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெற்கோ), தற்போதைக்கு எரிபொருள் விலையை அதிகரிக்க விரும்பவில்லை என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
பெற்றோல் விலையை மீண்டும் உயர்த்துவதற்கான லங்கா ஐஓசியின் தீர்மானம் குறித்து அறிக்கை ஒன்றை கோருவதற்கு எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
சிபெற்கோ எரிபொருள் விலைக்கு அமைய எரிபொருள் விலையை பேணுமாறு ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு தாம் முன்னர் பணிப்புரை வழங்கியிருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும், ஐ.ஓ.சி நிறுவனம் பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 49 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விலை அதிகரிப்பு தொடர்பான தீர்மானம் தொடர்பில் எந்த சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறித்து தனது அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கோரியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.