கரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள் !! (மருத்துவம்)
உணவின் சுவையை கூட்டும் உப்பு சமையலுக்கு மட்டுமின்றி, அழகு பராமரிப்பிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. அதுவும் பலரது முகத்திலுள்ள சொசொரப்பான கரும்புள்ளிகளை நீக்க உப்பு பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால் பலருக்கும் உப்பைக் கொண்டு எப்படி கரும்புள்ளிகளை நீக்குவது என்பது தெரியாது.
1 டேபிள் ஸ்பூன் உப்பை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, இதனை கொண்டு முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
1 டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் சர்க்கரையை கலந்து, ஈரமான முகத்தில் அவற்றைக் கொண்டு மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து, ஈரமான காட்டன் கொண்டு துடைத்து எடுத்து, பின் மாஸ்சுரைசர் தடவவும். இப்படி செய்வதால், கரும்புள்ளிகள் அதிகமாவதை தடுக்கலாம்.
தேன் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் தேனில், 2 டேபிள் ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனைக் காணலாம்.
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் நன்கு உலர வைத்து, பின் தேய்த்து கழுவ, கரும்புள்ளிகள் நீங்கும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.