டிசலால் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!!
34 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை ஏற்றிக்கொண்டு இலங்கை வந்துள்ள கப்பலில் இருந்து எரிபொருளை இறக்கும் பணி இன்று (28) ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
45 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் 30 ஆயிரம் தொன் டீசலும், 15 ஆயிரம் பெற்றோலும் தற்போது காணப்படுவதாகவும், இதன்படி நாடுமுழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள்களை அனுப்பும் பணிகள் முறையாக முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை கெப்படிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகயும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. டீசல் தட்டுப்பாட்டால் மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு மக்கள் வருகைத்தருவது குறைவடைந்துள்ளமையால் இவ்வாறு விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.