பெற்றோர்களுக்கு முக்கிய அறிவித்தல் !!
நாட்டில் அதிகமான வெப்பம் நிலவி வருவதால் குழந்தைகளை அதிகளவான நேரம் தண்ணீரில் விளையாட விட வேண்டுமென தெரிவிக்கும் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா, அதிகளவான நீரை குழந்தைகளுக்கு அருந்துவதற்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நாட்டிலுள்ள பிள்ளைகள் பல்வேறு நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளுக்கு வருகிறார்கள். இவ்வாறு வரும் பலர் தங்களுக்கு அதிகம் வியர்ப்பதாகவும், உடல் வலி, சோர்வு தன்மை உள்ளிட்டப் பல காரணங்களை வைத்தியர்களிடம் கூறுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
சில குழந்தைகள் எந்தவிதமான காரணங்களும் இல்லாம் தொடர்ந்து அழுது வருவதாகவும் வைத்தியர்களிடம் பெற்றோர்கள் கூறுவதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் அதிகளவான தண்ணீரை குழந்தைகளுக்குப் பருக கொடுக்க வேண்டும். அதிகளவில் தண்ணீரில் குழந்தைகள் இருக்க வேண்டும். குறிப்பாக தடுமன் காய்ச்சல் என எது இருந்தாலும் குழந்தைகளை குளியாட்ட தவர வேண்டாம் எனவும் அவர் இதன்போது பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினார்.
காலையிலும் மாலையிலும் சுமார் 20 நிமிடங்கள் குழந்தைகளை தண்ணீரில் விளையாட விட வேண்டும். குழந்தைகள் தண்ணீரில் அதிகமான காலம் இருக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது கூறினார்.