புற்றுநோயின் தாக்கத்தை குறைக்கும் கறிவேப்பிலை!! (மருத்துவம்)
கறிவேப்பிலையில், எண்ணற்ற மருத்துவக் குணங்கள் காணப்படுகின்றது என்பதனை நம்மில் பலர் அறிய மாட்டார்கள். சில வீடுகளில் சிறுவர்கள் கறிவேப்பிலையை உணவில் சேர்பதனைக்கூட விரும்பமாட்டார்கள். இதென்ன இது உணவின் வாசனையை அதிகரிக்கத்தானே பயன்படுகிறது என்றும் பலர் கருதுகின்றனர்.
இதனால், தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து வீசிவிடுகிறார்கள். ஆனால் இனிமேல் அப்படிச் செய்யாதீர்கள்.
ஏனெனில், கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது,
கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பத்திலேயே வரவிடாமல் தடுக்கும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் அவுஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர் லனேகோபி யாக் கறிவேப்பிலை புற்றுநோய், இருதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும், கறிவேப்பிலையை உண்பதால் நினைவாற்றல் அதிகரிக்க உதவுகின்றது என்கிறார்.
சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து அதன் சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்குத் தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் குறைவதுடன், பரம்பரை இளநரை, கண்பார்வை குறைவு ஏற்படாது.
கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் புற்றுநோய், நுரையீரல், இருதயம், இரத்த தொடர்பான நோய்கள் ஏற்படுவது குறையும்.
இவைதவிர, நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்தவுடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கிவந்தால் மருந்துகள் சாப்பிடும் அளவை பாதியாக குறைத்துவிடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பாதிக்கப்படுவது குறைவதுடன், சிறுநீரில் சீனி வெளியேறுவதும் முற்றிலும் தடைசெய்யப்படும்.
கறிவேப்பிலை இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகமென்று சாப்பிட்டால் குரல் இனிமையாகும், சளியுத் தொல்லையும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.