;
Athirady Tamil News

இந்தியாவுடன் 6 புதிய ஒப்பந்தங்கள் !!

0

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின் போது இலங்கையும் இந்தியாவும் இருதரப்பு நலன் சார்ந்த ஆறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இந்திய வெளிவிவகார ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையேயான பேச்சுக்களின் பின்னரே இவை இடம்பெற்றுள்ளன.

வௌிவிவகார அமைச்சில் இந்த உடன்படிக்கைகள் நேற்றுமுன்தினம் (28) கைச்சாத்திடப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் மானிய உதவியுடன் இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாளஅட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்,கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள மூன்று தீவுகளில் கலப்பின மின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை கைச்சாத்திடப்பட்டுள்ளன.

மேலும், மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல், காலி மாவட்டத்தில் உள்ள 200 பாடசாலைகளில் பாடத்திட்ட மென்பொருளுடன் கூடிய நவீன கணினி ஆய்வகங்கள் மற்றும் திறன் பலகைகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சுஷ்மா ஸ்வராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்துக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவையே கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.