பனை சார் உற்பத்தியாளர்களுக்கு உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)
பனை சார் உற்பத்தியாளர்களுக்கு உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் – நாவற்குழியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்றது
தென்னை கித்துள் மற்றும் பனை செய்கை மேம்பாடு இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் பனை அபிவிருத்தி சபையினால் தொழிலாளர்களை மேம்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனொரு கட்டமாக பனை சார்ந்த உற்பத்தி பொருட்களை மேற்கொள்பவர்களுக்கு 200 மில்லியன் ரூபா செலவில் உதவிகள் வழங்கப்படவுள்ளதுடன் சம்பிரதாயபூர்வமாக குறித்த உதவிகள் சிலருக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,தென்னை கித்துள் மற்றும் பனை செய்கை மேம்பாடு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ, பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் கிரிஷாந்த பத்திராஜா, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீசற்குணரஜா, வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் பளிகக்கார,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன். கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”