மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !!
இன்றுமுதல் (02) மின்வெட்டு நேரம் குறைக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.சி.பெர்டினாண்டோ தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கைக்கு வரவிருக்கும் டீசல் கையிருப்பை மின்சார சபைக்கு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நேற்று முன்தினம் (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
இதன் விளைவாக இன்று முதல் நான்கு மணி நேரத்துக்கும் குறைவான மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் மின்சார சபைக்கு தொடர்ந்து உலை எண்ணெய் மற்றும் டீசல் விநியோகம் கிடைத்தால், மின்வெட்டை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும் குறிப்பிட்டார்.