அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா?

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார சிக்கல் நிலைமைக்கு மத்தியில் ,தற்போது அமைச்சுப் பதவிகளில் உள்ள அனைவரும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று பிரதமர் தலைமையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் பதவியை இராஜினாமா செய்யக் கூடாதென இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதுடன் , பிரதமர் தமது பதவியில் நீடிக்க வேண்டுமென அமைச்சர்கள் அனைவரும் கையொப்பமிட்ட கடிதமொன்று நாளை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
நெருக்கடி நிலைமையை தணிக்க பதவி விலக தயாரென பிரதமர் மஹிந்த இங்கு கூறினாலும் அமைச்சர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை.
நாளை காலை அனைத்து அமைச்சர்களும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர் . அப்போது இந்த கடிதம் சமர்ப்பிக்கப்படவுள்ளது .
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”