யாழில் சட்டவிரோத கொல்களம் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு, 50 இறைச்சியுடன் ஒருவர் கைது !! (படங்கள்)
யாழில் சட்டவிரோத கொல்களம் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு, 50 இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , மாடு ஒன்றும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஏபி வீதியில் சட்டவிரோதமான முறையில் கொல்களம் ஒன்று இயங்கி வருவதாகவும் , அங்கு மாடுகளை திருடி வந்து கொலை செய்யப்பட்டு இறைச்சியாக்கி விற்கப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தினை சுற்றி வளைத்த பொலிஸார், அங்கு நின்ற 42 வயதுடைய நபரை கைது செய்ததுடன் , அவரிடம் இருந்து 50 கிலோ நிறையுடைய மாட்டிறைச்சியும் மீட்கப்பட்டு இருந்தன.
அத்துடன் கொலை செய்வதற்க்கு அங்கு கட்டப்பட்டு இருந்த மாடு ஒன்றையும் பொலிஸார் உயிருடன் மீட்டதுடன், மாடுகளை கொலை செய்து இறைச்சி ஆக்குவதற்கான ஆயுதங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”