பாதுகாப்பு அமைச்சின் எச்சரிக்கை !!
தற்போது நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுப்பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பு அறிக்கைகளுக்கு அமைய இரண்டு குழுக்கள் எதிர்ப்பு நடவடிக்கைளை முன்னெடுக்கின்றமை தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்துள்ள அவர்,
குறித்த இரண்டு குழுக்களில் ஒன்று அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை, மற்றைய குழு அரச சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்கின்றது என்றார்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் ஜனநாயக சட்டகத்தை மீறி சென்றுள்ளமையை நாம் அவதானித்து வருகின்றோம்.
எனவே பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலான போராட்டங்களை ஒடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம்!! (படங்கள்)