கோட்டாவை நாட்டை விட்டு வெளியேறுமாறு வவுனியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!! (படங்கள்)
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரி வவுனியா பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று (05.04) காலை வவுனியா, மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பித்த ஆர்ப்பாட்ட பேரணியானது கண்டி வீதியை அடைந்து, ஹொரவப்பொத்தானை வீதியூடாக பசார் வீதி சென்று பழைய பேரூந்து நிலையத்தை அடைந்தது.
இதன்போது மணிக்கூட்டு கோபுர சந்தி மற்றும் பழைய பேருந்து நிலையம் என்பவற்றுக்கு முன்னால் வீதியை மறித்தும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘கோட்டா நாட்டை விட்டு வெளியேறு, கோட்ட வீட்டுக்கு செல்லுங்ள்- நாட்டை சீரழிக்காதே, பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்காதே, அணுகுண்டு இல்லாமல் நாட்டை அழிக்காNது, கோட்டா வீட்டுக்கும்- நாட்டுக்கும் கேடு, சத்தம் போராடாமல் அமெரிக்காவுக்கு ஓடு’ என எழுத்தப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.
பொலிசார் பாதுகாப்பு மற்றும் கண்ணகாணிப்பு நடைவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். 600 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் அமைதியான முறையில் சுமார் 3 மணித்தியாலயம் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருந்ததுடன் பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”
யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம்!! (படங்கள்)
இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சாதகமான பதில் – விமல்!!
யாழில் ஊரடங்கு வேளையில் ஊடகவியலாளர்களுக்கு பொலிசாரால் அச்சுறுத்தல்!! (படங்கள்)