ஜனாதிபதி சற்றுமுன்னர் வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தல்!!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த மக்கள் அவசர கால நிலைமையை ரத்துச் செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் வௌியிட்டுள்ளார்.
இலங்கையில் மக்கள் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வௌியிட்டிருந்தார்.
கடந்த சில தினங்களாக நாட்டில் இடம்பெற்றுவரும் மக்கள் எதிர்ப்பு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், எதிர்க்கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு தமது எதிர்ப்பை வௌிப்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.