சிறுவர் யாசகம் பெறுதல் மற்றும் சிறுவர் வியாபாரத்தை கட்டுப்படுத்தும் கலந்துரையாடல்!!! (படங்கள்)
சிறுவர் யாசகம் பெறுதல் மற்றும் சிறுவர் வியாபாரத்தை கட்டுப்படுத்தும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (05) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் சிறுவர்களைப் பயன்படுத்தி யாசகம் பெறுதல் மற்றும் சிறுவர் வியாபாரத்தை கட்டுப்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு, பதிவில்லாத விடுதிகளை கண்காணித்து சட்டநடவடிக்கையெடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், பாடசாலை மாணவர்களின் ஒழுக்கநெறிகள் மற்றும் இருபத்தொரு வயதிற்கு குறைந்தவர்களிற்கு சிகரெட் விற்றல், மருத்துச் சிட்டையில்லாது மருந்து வழங்குதல் மற்றும் பொது இடங்களில் நிகழும் சமூகசீர்கேடுகள் ஆகிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் ( காணி), உதவிமாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், மாநகர சபை ஆணையாளர், சட்ட வைத்தியர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், வலயக் கல்வி பிரதிநிதி, மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”