இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு வீழ்ச்சி!!
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு மார்ச் மாதத்தில் 16.1 சதவீதத்தால் குறைவந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் இது தெரியவந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் உத்தியோகபூர்வ கையிருப்பின் அளவு 2,311 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில் மார்ச் இறுதியில் 1,939 மில்லியனாகக் குறைந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு மார்ச் மாதத்தினுள் 2,026 மில்லியன் டொலரில் இருந்து 1,724 மில்லியன் டொலர்கள் வரை 14.09 சதவீதம் சரிந்துள்ள்து.
இதற்கிடையில், மார்ச் மாதத்தில் 98 மில்லியன் டொலராக இருந்த தங்கம் கையிருப்பு 28 மில்லியன் டொலராக குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது 70 சதவீத வீழ்ச்சியாகும் என மத்திய வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.