பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு பாகிஸ்தானில் அச்சுறுத்தல் !!
பஞ்சாப் மாநிலம் மியான்வாலி மாவட்டத்திலுள்ள தந்தையொருவர், தனக்கு மகன் வேண்டும் என்பதற்காக தனது ஏழு மாத மகளை சுட்டுக் கொன்றுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட ஷாஜாய்ப் கான், இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டுள்ளதுடன், அவருடைய மனைவிக்கு ஜன்னத் என்ற பெண் குழந்தை பிறந்ததுள்ளது.
பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததற்காக மனைவி மீது கோபமடைந்த அவர், தனது மனைவியிடம் குழந்தையைப் பறித்து, துப்பாக்கியால் சுட்டு விட்டு, பின்னர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
வைத்தியசாலைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்ட போதும் குழந்தை இறந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்தனர்.
சம்பவம் நடந்த ஓரிரு நாட்களுக்குப் பின்னர், பாக்கர் மாவட்டத்தில் இருந்து குற்றவாளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையை மனைவி மற்றும் உறவினர்களிடம் தெரிவித்திருந்த அவர், தனது மகள் பிறந்தபோது வைத்தியசாலைக்குக் கூட அவளைப் பார்க்க வரவில்லை என்று பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் அதிர்ச்சியாக இருந்தாலும், நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். ஏனெனின், பாலின இடைவெளி குறியீட்டில் 156 நாடுகளில் பாகிஸ்தான் 153ஆவது இடத்தில் உள்ளது.
குழந்தையை கொன்றதன் ஒரே நோக்கம் அவளது பாலினம் என்று தேசிய பெண்கள் நிலை ஆணைக்குழுவின் தலைவர் நிலோபர் பக்தியார் கூறினார்.
ஒரு பெண் குழந்தை பிறப்பது பெருமைக்குரியது மற்றும் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு காரணம் என்று கடவுளின் நபியின் மரபு ஒரு மகள் மூலம் தொடர்ந்தது என்றும் பிரபல மத அறிஞர் தாரிக் ஜமீல் தெரிவித்துள்ளார்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, பாலின இடைவெளிக் குறியீடு பாகிஸ்தானுக்கு சாதகமான இல்லை. பெண்களின் உரிமைகள் விடயத்தில் நாடு மிகவும் கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை இந்தக் குறியீடு காட்டுகிறது என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.