;
Athirady Tamil News

மகனை தேடி இராணுவ புலனாய்வாளர்கள் தந்தையிடம் விசாரணை!!!

0

மகனை தேடி இராணுவ புலனாய்வாளர்கள் தந்தையிடம் விசாரணை. தவசிக்குளம், கொடிகாமம் யாழ்ப்பாணத்தில் சம்பவம். அச்சத்தில் உறைந்துள்ள தந்தையும் தாயும்.

நாட்டின் பொருளாதார நிலை சிக்கலில் உள்ள நிலையிலும் குறிவைக்கப்பட்ட தமிழர்களை தேடி அலையும் இராணுவத்தினராலும் புலனாய்வாளர்களினாலும் J / 328 கிராம அலுவலகர் பிரிவு, தவசிக்குளம், கொடிகாமம், யாழ்ப்பாணம் எனும் இடத்தினை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் கோகிலன் என்பவரை தேடி சென்று தொடர் விசாரணை நடத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன இதன்போது அவரது தந்தையான கதிரன் சுந்தரலிங்கம்
என்பவரை எமது செய்தி சேவை தொடர்புகொண்டபோது மேலும் பல தகவல்களை அவரிடம் இருந்து அறிய முடிந்தது.

இதன்படி தனது மகன் விடுதலைப்புலி பயங்கரவாதிகளுடன் நீண்டகால தொடர்புகளை பேணிவந்தார் எனவும். அவரது தொடர்புகள் தம்மால் உறுதி செய்யப்பட்டதாகவும், உறுதி செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விசாரணைக்கு இரண்டு தடவைகள் தமக்கு பலாலி இராணுவமுகாமுக்கு வரும்படி அழைப்பு வந்ததாகவும் தான் அதற்கு செல்லாததினால் கொழும்பில் இராணுவ தலைமையாகத்தில் இயங்கும் இராணுவ விசேட புலனாய்வு பிரிவுக்கு 18.03.2022 வரும்படி 04.03.2022 அன்று திகதி இடபட்ட கடிதமூல அழைப்பு வந்ததாகவும். நாட்டின் சூழ்நிலை மற்றும் சுகவீனம் காரணமாக தான் அங்கு செல்லமுடியாத காரணத்தினை அவர்கள் அனுப்பிய கடிதத்தில் இருந்த தொலைபேசி இயக்கத்துக்கு தொடர்புகொண்டு
தெரிவித்த நிலையில் தான் 29.03.2022 அன்று மதியம் 2.00 மணி அளவில் தம்மிடம் வந்து விசாரணைகள் நடத்தியதாகவும்
தெரிவித்தார்.

எனினும் அவர்களது விசாரணைகள் மிகவும் கெடுபுடியாக இருந்ததாகவும். கோகிலன் பற்றி தகவல்கள் தெரிந்தால் உடன் அறிவிக்கும்படியும் தமக்கு அறிவிக்காமல் மறைத்தால் தம்மை தேவை ஏற்படின் பயங்கரவாத தடை சட்டதின் கீழ் கைதுசெய்து தமக்கு தேவையான முறையில் சட்ட ரீதியிலோ அல்லது உண்மைகளை சேகரிக்க அவர்கள் தாம் விரும்பும் முறையிலோ விசாரிக்கவேண்டி வரும் எனவும் அச்சுறுத்தி சென்றதாகவும் இந்த சம்பவத்தினால் தான் மன உளைச்சலுக்கும் அச்சத்துக்கு உள்ளாகி சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவித்தார். தனது மகனின் செயல்பாட்டினால் நீண்ட காலமாக தானும் தனது மனைவியும் அதிக துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் இதன்போது அவர் தெரிவித்தார்.
செய்திகளுக்காக – நக்கீரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.