ஜனாதிபதி செயலகத்தை முடக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் !! (படங்கள்)
அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் இன்று முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் மாபெரும் மக்கள் புரட்சியாக மாறியுள்ளது.
சுமார் 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டதுடன், “ஜனாதிபதி பதவி விலக வேண்டும்” என்ற கோசத்தையே அவர்கள் முதன்மைப்படுத்தி இதில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அரசாங்கத்திற்கு எதிரான பல பதாகைகளையும் ஏந்தியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காலிமுகத்திடலில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரை சென்று, தற்போது ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
பாதுகாப்பிற்காக பல பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் அவ்விடத்தில் குவிக்கப்பட்ட போதும், மக்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.