;
Athirady Tamil News

ஆட்சியை மாற்ற கோராமல் ஆட்சி கட்டமைப்பை மாற்ற கோரினால் நாமும் போராட தயார் – யாழ் மாநகர முதல்வர் !! (வீடியோ)

0

சிங்கள மக்கள் ஆட்சியை மாற்ற கோராமல் ஆட்சி கட்டமைப்பை மாற்ற கோரினால் தெருத்தெருவாக இறங்கி போராட நாம் தயார் என யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ் மாநகரசபையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சமகால நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மாநகர முதல்வர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கைகள் பதில் கிடைக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பெரும்பாலும் சமஷ்டியே இருக்கின்றது. இதனை சிங்கள ஆட்சியாளர்களும் சிங்கள மக்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஐரோப்பாவில் உள்ள நாடாக இருக்கட்டும். வட அமெரிக்க நாடுகளாக இருக்கட்டும். அனைத்து நாடுகளும் தங்களுடைய ஆட்சி கட்டமைப்பாக சமஸ்டியையே கொண்டுள்ளது. அதனால்தான் அவர்கள் அபிவிருத்தி அடைந்திருக்கின்றனர். அதனை தென்னிலங்கை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து இங்கு காசு வந்தால் உடனடியாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போய் விசாரிக்கிறது. இவ்வாறு இருந்தால் எவ்வாறு வெளிநாட்டிலிருந்து பணம் இங்கு வரும். எல்லாவற்றையும் இனவாத கண்ணோட்டத்துடன் பார்க்க முடியாது.

ஏராளமான புலம்பெயர்ந்த மக்களையும் அமைப்புக்களையும் இலங்கையில் தடைசெய்யட்டுள்ளனர். அப்படி இருந்தால் எவ்வாறு அவர்கள் இங்கு முதலிடுவார்கள்.

ஆட்சி கட்டமைப்பும் அரசியல் யாப்பும் மாற்றப்பட வேண்டும். இனவாத செயற்பாடுகள் திருத்தப்பட வேண்டும். சிங்கள சகோதரர்கள் தங்கள் ஆட்சியாளர்களுக்கு அழுத்தங்களைக் கொடுத்து
இனப்பிரச்சினையை தீர்க்க ஒத்துழைக்க வேண்டும்.

நான் பெரிது நீ பெரிது என்று தமிழ் அரசியல்வாதிகள் போராடுவதை விடுத்து எல்லோரும் சர்வதேச சமூகத்திடம் சர்வதேச நாணய நிதியம் போன்ற நிதி நிறுவனங்களிடம்”இலங்கைக்கு நிதி உதவி செய்யப் போவதாக இருந்தால் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமையை வழங்கி விட்டு செய்யுங்கள்” என்ற கோரிக்கையை வையுங்கள்

சிங்கள மக்கள் ஆட்சியை மாற்ற கோரி போராடி வருகிறார்கள். ஆனால் தமிழர் பகுதிகளில் இந்த போராட்டங்கள் பெரிய அளவில் இடம் பெறவில்லை. ஆனால் சிங்கள மக்கள் ஆட்சியை மாற்ற கோராமல் ஆட்சி கட்டமைப்பை மாற்ற கோரினால் தெருத்தெருவாக இறங்கி போராட நாம் தயார் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு !!

மஹிந்தவின் இராஜினாமாவை இருவர் தடுத்துவிட்டனர் !!

போராட்டத்தில் குதிக்கும் எண்ணம் வந்துவிட்டது !!

நள்ளிரவு கடந்தும் ஆர்ப்பாட்டம் !!

போராட்டத்தின் இடையே நோன்பு துறந்தனர் !! (படங்கள்)

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்!!

ஐ.எம்.எஃப் செல்லும் இலங்கை அதிகாரிகள் !!

காலி முகத்திடலில் ஜேம்மர்: போராட்டக்காரர்கள் அந்தரிப்பு !!

உடும்பு பிடியில் இருகிறார் கோட்டா !!

பிச்சைக்காரர்களை விட மோசமான நிலைக்கு விழுந்துவிட்டோம்!!

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் ஊடக அறிக்கை!!

பொலிஸாருக்கு ரோஜா கொடுத்த ஆர்ப்பாட்டக்காரி !!

நிதியமைச்சர் யார்? அதிரடி அறிவிப்பு வெளியானது !!

சபாநாயகர் அதிரடி: 2 எம்.பிக்களை தூக்கினார் !!

நம்பிக்கை பிரேரணையை கொண்டு வாருங்கள் !!

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்!!

கோட்டாபய -ரணில் சந்தித்துப் பேச்சு !!

“இலங்கை கொதிக்கின்றது” ஜெசிந்தா ஆர்டெர்ன் !!

கணவன், மனைவி கதைச்சொன்னார் ​​​ஏரான் !!

இலங்கை பயணம் செய்யவுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கான அறிவிப்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.