;
Athirady Tamil News

“புளொட்” புதிய செயலாளர் தெரிவு, த.தே.கூ ஒரு முடிவு எடுத்தால் தான் அது பலமாக இருக்கும்!!

0

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையை பொறுத்தமட்டில் நாங்கள் தனியாக முடிவு எடுப்பதை காட்டிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒரு முடிவு எடுத்தால் தான் அது பலமாக இருக்கும் என புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் தெரிவித்தார்.

இன்றைய தினம் இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், நாங்கள் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களாக முடிவு எடுக்கும்போது அது பலமாக இருக்கும். எந்தவிதமான பிரேரணை கொண்டு வந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மூன்று கட்சிகளும் கலந்துரையாடி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் மூன்று கட்சியும் இணைந்து தீர்மானம் எடுக்க முடியாவிட்டால் நாங்கள் தனியாக தீர்மானிக்க முடியும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இலங்கை மக்களை மிகப் பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி பாதித்திருக்கின்றது. ஆகவே, பொருளாதார பின்னடைவு நிச்சயமாக நீண்ட காலமாக இருந்து வந்த ஒன்று. இந்த நாட்டிலே யுத்தத்திற்காக செலவழிக்கப்பட்ட பெருந்தொகையான பணங்கள் அதற்காக பட்ட கடன்கள் அதனால் ஏற்பட்ட அழிவுகள் எல்லாம் சேர்த்தே பொருளாதார பின்னடைவுக்கு ஆரம்பிக்க காரணமாக உள்ளது.

போராட்டத்துக்கு ஜனாதிபதி சரியான பதில் ஒன்றை வழங்க வேண்டும். ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று கூறியே மக்கள் போராடுகிறார்கள். அதனை ஜனாதிபதி செய்ய மாட்டார் என்றே நான் நினைக்கின்றேன். பொருளாதாரத்தை முன்னேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதேவேளை, இணுவில் பகுதியில் இடம்பெற்ற புளொட் மத்திய குழுக் கூட்டத்தில் அண்மையில் உயிரிழந்த கட்சியின் பொதுச் செயலாளருமான அமரர் சு. சதானந்தம் அவர்களின் வெற்றிடத்திற்கு தற்காலிகமாக ஒருவர் நியமிக்கப்பட்டார். இதன்போது கட்சிக்கான புதிய செயலாளராக திரு. நாகலிங்கம் இரட்ணலிங்கம் (குரு) அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

புளொட் மத்திய குழுக் கூட்டத்தில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன், உபதலைவர்கள் ஆர்.ஆர், விசு, கேசவன் (மட்டக்களப்பு) நிதிப் பொறுப்பாளர் சிவநேசன் (பவான்), நிர்வாகப் பொறுப்பாளர் பற்றிக், மாவட்டப் பொறுப்பாளர்கள் உட்பட உயர்மட்ட தோழர்கள், கட்சியினுடைய உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

பிரதமர் மஹிந்த இன்றிரவு விசேட உரை?

காலி முகத்திடலில் ‘கோட்டாபயகம’ !!

மஹிந்தவை நீக்கவும்; மைத்திரி !!

கோட்டாவுக்கு முன்னர் மைத்திரியை சந்தித்த சஜித் !!

ரணிலுக்கு முக்கிய பொறுப்பு? இன்றிரவு திடீர் திருப்பம்!!

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் புதிய தகவல் !!

கோல்​பேஸ் போராட்டம் தொடர்கிறது மரவள்ளியுடன் சுடசுட தேநீர் !!

அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு !!

மஹிந்தவின் இராஜினாமாவை இருவர் தடுத்துவிட்டனர் !!

போராட்டத்தில் குதிக்கும் எண்ணம் வந்துவிட்டது !!

நள்ளிரவு கடந்தும் ஆர்ப்பாட்டம் !!

போராட்டத்தின் இடையே நோன்பு துறந்தனர் !! (படங்கள்)

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்!!

ஐ.எம்.எஃப் செல்லும் இலங்கை அதிகாரிகள் !!

காலி முகத்திடலில் ஜேம்மர்: போராட்டக்காரர்கள் அந்தரிப்பு !!

உடும்பு பிடியில் இருகிறார் கோட்டா !!

பிச்சைக்காரர்களை விட மோசமான நிலைக்கு விழுந்துவிட்டோம்!!

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் ஊடக அறிக்கை!!

பொலிஸாருக்கு ரோஜா கொடுத்த ஆர்ப்பாட்டக்காரி !!

நிதியமைச்சர் யார்? அதிரடி அறிவிப்பு வெளியானது !!

சபாநாயகர் அதிரடி: 2 எம்.பிக்களை தூக்கினார் !!

நம்பிக்கை பிரேரணையை கொண்டு வாருங்கள் !!

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்!!

கோட்டாபய -ரணில் சந்தித்துப் பேச்சு !!

“இலங்கை கொதிக்கின்றது” ஜெசிந்தா ஆர்டெர்ன் !!

கணவன், மனைவி கதைச்சொன்னார் ​​​ஏரான் !!

இலங்கை பயணம் செய்யவுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கான அறிவிப்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.