நீராட சென்ற சிறுவனை இழுத்துச் சென்ற முதலை!!
கல்கிரியாகம – மானேறுவ ரம்பாவெவயில் குளித்துக் கொண்டிருந்த மூன்று சிறுவர்களில் ஒருவரை முதலை இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று சிறுவர்களும் நேற்று (11) பிற்பகல் குளித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மானேருவ நெகம்பனை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவனே இவ்வாறு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ள சிறுவனை தேடும் நடவடிக்கையில் கடற்படையினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.