மைத்திரியின் யோசனையை நிராகரித்த ஜனாதிபதி !!

ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் இல்லாத இடைக்கால அரசாங்கத்தை நாட்டில் நிறுவுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த யோசனையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.