சு.க அலுவலகத்தில் பதற்றம் !!

கொழும்ப-10 டீ.பீ.ஜயா மாவத்தையில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியின் தலைமையகத்துக்கு வந்தபோதே இந்த பதற்றம் ஏற்பட்டது.
தலைமை காரியாலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், கடும் கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களுடன், தயாசிறி ஜயசேகர எம்.பி,கலந்துரையாடலில் ஈடுபட்டு, நிலைமையை வழமைக்குக் கொண்டுவந்துள்ளார் என அறியமுடிகின்றது.