கடன் செலுத்துவதை இடைநிறுத்தியது இலங்கை !!
வெளிநாடுகளுக்கு இலங்கை செலுத்த வேண்டிய அனைத்து கடன் தொகைகளையும் தற்காலிமாக செலுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் பேராசிரியர் நந்தலால் வீரசங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களை செலுத்துவது சவாலாக மாறியுள்ளதால், கடனை செலுத்த முடியாத நிலையே காணப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது வெளிநாட்டுக்கு கையிருப்பு மிகவும் குறைவாகக் காணப்படுவதால், எரிபொருள், மருந்து பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்வதற்காக அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் பெற்றுக்கொண்ட கடனை இலங்கை எப்போதும் செலுத்தத் தவறியதில்லை. தற்போது தற்காலிமாக செலுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கோல்பேஸ் போராட்டம் தொடர்கிறது மரவள்ளியுடன் சுடசுட தேநீர் !!
அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு !!
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் ஊடக அறிக்கை!!