நிலந்த ஜயவர்தனவிற்கு இடமாற்றம் !!
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த அவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா திபர் உதவி சேவை பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உதவி சேவை பதவியில் இருந்த பிரியந்த வீரசூரிய மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.