பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!
புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பட்டாசுகளால் ஏற்படும் விபத்துக்கள் அதிகளவில் பதிவாவதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின், பயிற்றுவிப்பு தாதி உத்தியோகத்தர் புஷ்பா ரம்யாணி டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.
வீடுகளில் தற்போது பெற்றோல் சேமித்து வைக்கப்படுகின்ற நிலையில், விபத்துகள் ஏற்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, பண்டிகைக் காலத்தில் சுற்றுலாவை மேற்கொள்வோர் நீர்நிலைகளில் நீராடுவது குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதேநேரம், மதுபோதையுடன் வாகனம் செலுத்துவதையும் தவிர்க்குமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.