நாட்டின் நிலை தொடர்பாக சர்வோதயம் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை!! (படங்கள்)
இலங்கையின் மிகப் பெரிய அரசரார்பற்ற நிறுவனமான சர்வோதயமானது தற்போதைய நாட்டின் நிலை தொடர்பாக சர்வோதயத்தின் தலைவர் வைத்திய கலாநிதி வின்யா ஆரியரத்ன அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையினை கீழே காணலாம்.
தற்போதைய நிலை தொடர்பாக சர்வோதய சிரமதான இயக்கத்தின் கூற்று நாம் அன்புடன் நேசிக்கின்ற நமது நாட்டில் தற்பொழுது எழுந்துள்ள சமூக மற்றும் அரசியல் நிலையினால் எமது சமூகம் முகம் கொடுத்துள்ள எதிர்பாராத சவால்களை சர்வோதய சிரமதான இயக்கம் ஏற்றுக்கொள்ளுகிறது. இலங்கை முழுவதும் அனைத்து இனங்களையும் மதங்களையும்
சேர்ந்த எமது மக்கள் ஒன்றாகக் கைகோர்த்துக் கொண்டு அமைதியாக அஹிம்சை ரீதியாக நடத்துகின்ற பேரணியின் நேர்மையையும் செயல் நோக்கத்தையும் நாம் வரவேற்கிறோம். எமது நாட்டின் அரசியலமைப்பினால் போற்றிப்பேணப்படுகின்ற, பாதுகாக்கப்படுகின்ற மற்றும் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள கருத்து தெரிவிக்கும் மற்றும் பேச்சு சுதந்திரம் உலக உரிமை என்பதை சர்வோதயம் திடமாக நம்புகிறது.
பல அலைகளாக தொடர்கின்ற அஹிம்சை ரீதியான பேரணிகளும் கண்டனப் பேரணிகளும் அவற்றின் ஆழமான மற்றும் முழுமையான காரணிகள் அவற்றை ஆராய்வதற்கு எம்மை வலியுறுத்துகிறது. தனிப்பட்டவர்களின் மற்றும் சமூகத்தின் குறிப்பாக எமது நாட்டின் எதிர்கால இளைஞர் சமுதாயத்தின் தைரியத்தை நிச்சயமாகப் போற்றுகிறோம். எந்த அரசியல் தூண்டலும் இல்லாமல், தொடர்ச்சியாக எழுச்சியடைந்து நீதி, வெளிப்படைத்தன்மை, நல்லாட்சி, வகைப்பொறுப்பு, சனநாயகத்தை மதிக்கின்ற ஒரு புதிய சமூக – அரசியல் கலாசாரம், விழுமியங்கள் என்பவற்றைக் கோருவதை மக்கள் இயக்கம் என்ற வகையில் நாம் திடமாக நம்புகின்றோம்.
பல வகையிலும் முன்னணி வகிக்கின்ற எமது அன்பான சகோதரர்களின் சகோதரிகளின் விரக்தி, கலக்கம் மற்றும் அழுத்தங்கள் என்பவற்றை குறிப்பாக அவர்களின் பொருளாதார கஷ்டங்களையும் சவால்களையும் நாம் மனமார புரிந்து கொண்டுள்ளோம். நிலைபேறான அபிவிருத்தியையும் பெரிதும் வேண்டி நிற்கின்ற சமூக மாற்றத்தையும் கொண்டு வருவதற்கும் எமது மக்களும் சமூகங்களும் இந்த சந்தர்ப்பத்தை இதே மன உறுதியுடன் ஆற்றலுடன் முன்னெடுத்து எமது சமூக, அரசியல், ஆன்மீக ரீதியான, நீதியான, கலாசார மற்றும் பொருளாதார இலட்சியங்களை கொண்டுவருவார்கள்
என்பதை திடமாக நம்புகிறோம்.
கடந்த ஆறு தசாப்தங்களாக சர்வோதயத்தின் தலையீட்டுடன் நாம் அபிவிருத்தி பணிகளிலும் ஆக்கபுர்வமான சமூக மாற்றங்களிலும் பல்வகை நிகழ்ச்சித்திட்டங்களுக்கு வசதிப்படுத்தியுள்ளோம். கடந்த இரண்டு வருடங்களாக சர்வோதயம் கொவிட் – 19 தொற்றுக்கு தேசியமட்டத்தில் மக்களுடன் இணைந்து சுவோதய – சுகாதார எழுச்சி மற்றும் நல்வாழ்வு நிகழ்ச்சித்திட்டத்தில் ஈடுபட்டிருந்தது. கொவிட் – 19 லிருந்து வழமை நிலைக்கு நிலைமாறும்போது குறிப்பாக பொருளாதார நிலையை முன்னணியாகக் கொண்டு பல புதிய சவால்கள் தோன்றின.
இந்த எதிர்பாராத சவால்களை அணுகுவதற்கு எமது வலையமைப்புகளுக்கிடையில் குறிப்பாக அபிவிருத்தியையும் சமூக மாற்றத்தையும் உணர்வதற்கு நாடாளாவிய ரீதியில் அதிகளவில் பன்முகப்படுத்தப்பட்ட வகையில் திரண்ட சமூகங்களுடன் பாலங்களை அமைக்க வேண்டியிருந்தது. துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடி பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முக்கியமான மறுசீரமைப்பைக் கொண்டு வருதல் போன்ற உடனடி தீர்வுகள் தேவைப்பட்டன. சமூக பாதுகாப்பை
மேம்படுத்துவதற்கு குறிப்பாக மிகவும் வடுபட்டுள்ள நிலையில் உள்ள மக்களைப் பாதுகாப்பதற்காக இடைக்கால அரச பொறிமுறையொன்று வழியமைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் பொருளாதார மறுசீரமைப்பின் மீது செயலாற்றி அரசியல், சமுதாயம் மற்றும் ஆட்சி என்பவற்றை மேம்படுத்துவதற்கு ஏனைய கொள்கைகளுடன் சேர்த்து தேர்தல் மற்றும் அரசியல்
முறைமைகளையும் நாம் நிச்சயமாக மாற்ற வேண்டும்.
எமது எதிர்கால சந்ததியினருக்காக வினைத்திறன் மிக்க சமூக செயற்பாடுகளையும் நீண்டகாலம் இருக்கக்கூடிய அரசியல் கொள்கை கருத்தாடல்களையும் உடனே முன்னெடுப்பதற்கு ஆக்கபூர்வமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ள சக்தியை இந்த பேரணிகளின் ஊடாக உருவாக்குவதற்கு எமது இளைஞர்களை, சமூகங்களை, சமய தலைவர்களை, மூத்தோரை, சிவில் சமூகங்களை மற்றும் ஒவ்வொருவரையும் இந்த சந்தர்ப்பத்தில் கைகோர்த்துக்கொள்ள முன்வரும்படி மனமார
கேட்டுக்கொள்ளுகிறோம். இந்த கஷ;டமான நேரத்தில் ஒவ்வொருவரையும் அவர்களின் குடும்பத்தையும் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தனிமைப்படுத்திவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளும்படி தனிப்பட்டவர்கைளைக் கோட்டுக்கொள்ளுகிறோம். மக்கள் அமைதியாகவும் அஹிம்சை ரீதியாகவும் பேரணிகளில் செல்லும்போது அவர்களின் உரிமைகளைப் பாதுக்காக்கும்படி சட்டத்தை செயற்படுத்தும் முகவர்களிடம் வினயமாகக் கேட்டுக்கொள்ளுகிறோம்.
‘சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை பெரிதும் தேவைப்படுகின்ற இந்த நேரத்தில் எமக்கு முன்னால் நீண்டு கிடக்கும் எதிர்பாராத சவால்களைத் தீர்ப்பதற்கு தனிப்பட்ட மற்றும் கூட்டு எழுச்சியின் ஊடாக சமூகங்களின் அடிப்படை மனித தேவைகளை நிறைவேற்றுகின்ற நீதியான, நிலைபேறான, கருணைமிக்க சமூக ஒழுங்கை கட்டியெழுப்பவதற்கு வெளிநாட்டில் வாழ்கின்ற இளைஞர்கள், மக்கள், சமூகங்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களை கைகோர்த்துக்கொள்ளும்படி சர்வோதய இயக்கம் வரவேற்கிறது.
கோல்பேஸ் போராட்டம் தொடர்கிறது மரவள்ளியுடன் சுடசுட தேநீர் !!
அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு !!