உகாண்டா சர்ச்சை – ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் விளக்கம் !!
2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கொழும்பில் இருந்து உகாண்டாவின் Entebbe சர்வதேச விமான நிலையத்திற்கு 102 தொன் அச்சிடப்பட்ட காகிதங்களை கொண்டு செல்வதற்கான முன்பதிவு கிடைத்ததாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விமானப் பொதி முழுமையாக வணிக செயற்பாடாக அமைந்ததுடன், அதனூடாக விமான நிறுவனத்திற்கும் நாட்டிற்கும் அந்நிய செலாவணியை கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததாக நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உகாண்டா அரசாங்கத்தின் முன்பதிவிற்கமைய, பாதுகாப்பான அச்சிடும் செயற்பாட்டை மேற்கொள்ளும் இலங்கை உள்ளிட்ட உலகின் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு, அச்சிடப்பட்ட உகாண்டா நாட்டின் நாணயத்தாள்களை கொண்டு செல்வதற்காக பிரித்தானியாவின் சரக்கு போக்குவரத்து நிறுவனமொன்றின் விமானம் ஒன்றை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்டதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
100 தொன்களுக்கு அதிக பொருட்களை ஏற்றிய ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தொடர்ந்தும் மூன்று தடவைகள் Entebbe நோக்கி பயணித்ததாக கடந்த வருடம் பெப்ரவரி 21 ஆம் திகதி தகவல் வௌியானது.
இலங்கை விமானிகள் சங்கம், சமூக வலைத்தளங்களில் வௌியிட்ட தகவல்களுக்கு அமைய இந்த விடயம் வௌிவந்தது.
இந்த தகவலை தவறாக சித்தரித்து பல்வேறு விடயங்கள் தெரிவிக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தனது ட்விட்டர் செய்தியில் கூறியுள்ளது.
COVID நிலைமைக்கு மத்தியில் செயற்படாமலிருந்த நிறுவனத்தின் விமானம், பிரித்தானியாவின் பொருட்போக்குவரத்து நிறுவனமொன்றினால் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த செயற்பாட்டினால் அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள முடிந்ததாக ஶ்ரீலங்கன் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கோல்பேஸ் போராட்டம் தொடர்கிறது மரவள்ளியுடன் சுடசுட தேநீர் !!
அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு !!