ஜனாதிபதியை பதவி விலக கோரி காலிமுகத்திடலில் மாந்திரீக பூஜைகள்!! (படங்கள்)
அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று 9ஆவது நாளாகவும் தொடர்கிறது.
ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற கோஷங்கள் கடந்த 9ஆம் திகதி முதல் காலிமுகத்திடலில் ஒலித்து வருகின்றன.
இந்நிலையில், நேற்றிரவு ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்காக விசேட பூஜை வழிபாடுகள் காலிமுகத்திடலில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மலையாள மாந்திரீக பூஜை, மாத்தறை மாந்திரீகம் என பல மாந்திரீக பூஜைகள் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.
அத்தோடு, அனுராதபுரத்தைச் சேர்ந்த ஜனாதிபதியின் ஆஸ்தான ஜோதிடரான ஞானக்காவின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் சில பூஜைகள் இடம்பெற்றுள்ளன.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”