புதிய அமைச்சரவை குறித்து வௌியான தகவல்!!
புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, புதிய அமைச்சரவை இன்று (17) அல்லது நாளை (18) பதவியேற்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நாளை மாலை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அமைச்சரவையில் 15 அமைச்சர்கள் மாத்திரமே நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷஷீந்திர ராஜபக்ஷ ஆகியோர் புதிய அமைச்சரவையில் நியமிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர்களான காமினி லொகுகே, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் புதிய அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, புதிய அமைச்சரவையில் பல புதிய முகங்கள் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இராஜாங்க அமைச்சர்களின் தற்போதைய பதவிகள் அப்படியே இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, முன்னாள் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று மாலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் மாலை 5.00 மணியளவில் ஆரம்பமாகி இரவு 7.00 மணி வரை நீடித்தது.
எனினும், கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முன்னாள் அமைச்சர்கள் மறுத்துவிட்டனர்.
ஜனாதிபதியை பதவி விலக கோரி காலிமுகத்திடலில் மாந்திரீக பூஜைகள்!! (படங்கள்)